ஆதி பகவன் முதற்றே உலகு

கல்யாணம்


கல்யாணம் கல்யாணம் -காரிகைக்கு கல்யாணம்
என்னைக்கு கல்யாணம் -இலங்கொடிக்கு
சித்திரை மாதத்திலே- சீர்பாகம் தேதியிலே
ஞாயிறு திங்களுக்கு -நல்ல புதன்கிழமை
கல்யாணமென்று சொல்லி-கடலேறிப் பாக்குமிட்டார்
முகூர்த்தம் நடக்குதினு -முடிமன்னர்க்குப்   பாக்குமிட்டார்
 ஐம்பத்தாரு அரசர்க்கும்-அருமையாய் சீட்டெழுதி
வாழைமரம் பிளந்து -வாசலெல்லாம் பந்தலிட்டார்
தென்னைமரம் பிளந்து - தெருவெல்லாம் பந்தலிட்டார்
பந்தல் அலங்கரித்து -பாவையை அலங்கரித்தார்.



0 comments:

கருத்துரையிடுக

 
back to top