ஆதி பகவன் முதற்றே உலகு

நம்பி கை வை; நம்பிக்கை வை!


முட்களின்மேல் முகமூடி வாழ்க்கை
இனியும் வேண்டாம்  உனக்கு!

கவலைகளைக் கிழித்து காற்றோடு கலக்கவிடு;
சுற்றியிருக்கும் சூனியங்களைச் சுட்டு எரித்துவிடு;
எஞ்சிய சாம்பலையும் பரிகசித்துப் பூமிக்குள் புதை!

துக்கங்களை எல்லாம் தூவென தூற்றித் தூக்கிலிடு;
அதன் எச்சமேதும் மிச்சமிருந்தால் ,
அச்சமின்றி தூக்கித் தூர எறி!

நேற்றைய நிகழ்வுகள் எல்லாம்இன்றைய
நிழற்படங்களாய்த் தொங்கும் உன் வீட்டுச் சுவரில்!
அதன்பின் பல்லியும்,கொசுவுமே குடித்தனம் நடத்தட்டும்!

கண்ணிமைக்கும் இக்கனமொன்றே நிதர்சனம்;
அவ்விமைப்பொழுதில் பசுமிலைப் பரப்பின் நடுநரம்பை
முத்தமிடும் இளம்காலைப் பனித்துளியின் குளுமை உன் வாழ்க்கை!

உன் நெஞ்சக்கூட்டில் பொதிந்திருக்கும்
வைராக்கிய சிம்மாசனத்தின் முன்
மரணத்தூதுவன்கூட மண்டிஇடட்டும்!

அகண்ட வெளிதனில் ,
உனக்கான தேடல் என்ற ஒன்றும் இல்லை;
உனக்கென நிச்சய இடம் ஒன்று உண்டு என்று

நம்பிக்கை வை;வாழ்க்கைப் போர்களத்தில்
நம்பி கை வை!
பிரபஞ்சத்தின் மணிமகுடம் உன் காலடியை முத்தமிடட்டும்.



0 comments:

கருத்துரையிடுக

 
back to top