ஆதி பகவன் முதற்றே உலகு

கல்யாணம்


கல்யாணம் கல்யாணம் -காரிகைக்கு கல்யாணம்
என்னைக்கு கல்யாணம் -இலங்கொடிக்கு
சித்திரை மாதத்திலே- சீர்பாகம் தேதியிலே
ஞாயிறு திங்களுக்கு -நல்ல புதன்கிழமை
கல்யாணமென்று சொல்லி-கடலேறிப் பாக்குமிட்டார்
முகூர்த்தம் நடக்குதினு -முடிமன்னர்க்குப்   பாக்குமிட்டார்
 ஐம்பத்தாரு அரசர்க்கும்-அருமையாய் சீட்டெழுதி
வாழைமரம் பிளந்து -வாசலெல்லாம் பந்தலிட்டார்
தென்னைமரம் பிளந்து - தெருவெல்லாம் பந்தலிட்டார்
பந்தல் அலங்கரித்து -பாவையை அலங்கரித்தார்.

கண்ணாமூச்சி விளையாட்டு



பச்சைத் தவக்காட பளபளங்க
பழனி மச்சான் -மினுமினுக்க
செங்கரட்டி - சிவத்தபிள்ளை
கிண்ணா வந்தான்- கினுக்கட்டி

உடும்பு-துடுப்பு
மகா-சுகா
பால்- பரங்கி
எட்டுமன்-குட்டுமன்-ஜல்

ஒருப்பத்தி-இருப்பத்தி
ஓரிய-மங்கலம்
சீப்பு-சினுக்கவலி
உங்கையா பேரென்ன ?

முருகந்தண்டு -தின்னவரே
முள்ளிசாறு-குடிச்சவரே
தார் தார் -வாழைக்காய்
புதுப் புது மண்டபம்
பூமாதேவி கைஎடு.

தாலாட்டு



ஆராரோ ஆரிராரோ-சாமி
ஆறு லட்சம் வண்ணக்கிளி
செம்பவள தொட்டிலிலே-என்
சீராளா  நீ தூங்கு
பச்சை வண்ணக் கட்டிலிலே
பாலகனே நீ தூங்கு
குருத்து வாழைபோல -தொட்டிலிலே
குதித்தாடும் பாலகனே
மாம்பழ மேனியனே
மயங்கி நீ கண்ணுறங்கு.

முத்து முனியசாமி


முத்து முனியசாமி
மூர்க்கமுள்ள தேவதையே
சத்தத்தை நீகொடயா
சரளிவிட்டு நான்பாட
ஊருக்கு நேர்கிழக்கே
உறுதியுள்ள  அய்யனாரே
உத்தரவு நீ கொடயா
உன்னடிமை நான்பாட
பூப்பூக்கும் புளியமரம்
பொன்னிலங்கும் அய்யனாரு
நாட்டிலங்கும் பெத்தனாச்சி
நல்லவரம் தந்திடுவா!  

 

கணபதி பூசை

                                                                                                                                            
  

















 எருதுக் கொளப்படையில்
எள்ளுருண்டை ஆயிரமாம்,
மாட்டுக் கொளப்படையில்

மாவுருண்டை ஆயிரமாம்,
ஆட்டுக் கொளைபடையில்
அதிரசம் ஆயிரமாம் ,
கன்னுக் கொளப்படையில்
கடலுருண்டை ஆயிரமாம்,
குட்டிக் கொளப்படையில்
கொழுக்கட்டை ஆயிரமாம்,
இத்தனையும் ஒப்பதாம்-எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு.

இதுபோல் மழைக்காலம் என் வாழ்வில் வருமோ?


Rain Scraps



Rain Scraps




Rain Scraps



Rain Scraps

சும்மா சிரிங்கப்பா!

குரங்கு சேட்டைன்னா இதுதான்!

Click to get cool Animations for your MySpace profile


காலைல்ல பல் விளக்குவியா ஜம்பி?

Click to get cool Animations for your MySpace profile


உடம்பு இளைக்கணும்,அதான் வாக்கிங் போறேன்!
Click to get cool Animations for your MySpace profile


ஹி!ஹி!ஹி!இது எப்படி இருக்கு?
Click to get cool Animations for your MySpace profile

மாலை முழுதும் விளையாட்டு! Click to get cool Animations for your MySpace profile



Click to get cool Animations for your MySpace profile அடச்சே நீயாப்பா! பயந்தேபோயிட்டேன் போ!
 
back to top