ஆதி பகவன் முதற்றே உலகு

அக்கரைப் பச்சை



குளத்துமீன் நினைத்ததாம்,
பிறந்தால் வாஸ்து மீனாய்ப் பிறக்கவேண்டும்
என்ன ஒரு ராஜவாழ்க்கை!

வாஸ்துமீன் நினைத்ததாம்,
பிறந்தால் குளத்துமீனாய்ப் பிறக்கவேண்டும்,
என்ன ஒரு கும்மாள வாழ்க்கை!

பெற்றவன் நீ குரு



 
மகவாய் உருவெடுத்தபோது
புவியைக்காட்டினாய்!
மழழையாய் தவழும்போது
தயக்கம் போக்கினாய்!
அதிர்வுகள் நோக்கும்போது
அரணாய் நின்றாய்!
மனம் வலித்தபோது
மனத்திட்பம் தந்தாய்!
தந்தை! எனைபெற்றவன் நீ குரு!


ருசி


அது எப்படி வந்தது,
அம்மா வழித்து ஊட்டும் 
கடைசிவாய் தயிர்சாதத்திற்கு மட்டும்
அத்தனை ருசி!

பாவம்


ஆடு,கோழி அசைவத்துடன் 
அமர்க்களமாய் மதிய உணவு.
கறிவிருந்து உண்டு களைத்து
கண்ணயர்ந்த வேளையிலே
கடைக்குட்டி பையன் பயந்து
பதறி ஓடிவந்தான்,
"அப்பா! தெரியாமல் ஒரு
பட்டாம்பூச்சியைக் கொன்றுவிட்டேன்,
இரவில் கனவில் அது பெரிதாகி
என்னைத் துரத்துமா?"
எனக்கு ஏனோ வயிற்றைப்  பிசைந்தது!


மெஹந்தி-மருதாணிக் கோலங்கள்


மெஹந்தி-மருதாணிக் கோலங்கள்(ஒவ்வொரு படத்தின்மீது கிளிக் செய்தால் அதன் பெரிய வடிவத்தைப் (enlarged view )பார்க்கலாம்)












































































 
back to top