ஆதி பகவன் முதற்றே உலகு

மழழையாய் மாறேனோ?!


தும்பைப்பூசெடி கொண்டு
தும்பி துரத்திய காலம்!

கட்டெரும்புக்கு கண்ணீர்விட்டு
கல்லறை எழுப்பிய காலம்!

அர்ச்சுனன் துணைவேண்டி
அடைமழை இடிகேட்டு அரண்ட காலம்!

அம்மாவின் முந்திசீலையை
சுண்டுவிரலிடுக்கில்சுற்றி சுகமாய் கண்ணுரங்கிய காலம்!

ஆஹா!மீண்டும் மழழையாய் மாறேனோ?!

மரம் தரும் வரம்


மண்சரிவால் மண்ணாகிப்போன மனிதர்கள்,
கலைந்துபோன கனவுகள்,
இத்தனையும் ஏன்?
இயற்கையை நேசி!
இயற்கையை சுவாசி!
இது உன்னால் இயன்றால்
மரம் தரும் நல்வரம்!
இல்லாவிட்டால் மண்ணுக்கு நீ உரம்!

கண்டுபிடி-விடுகதைகள்

கண்டுபிடி-விடுகதைகள்



[vidu.PNG]

அம்மா!

கைவிளக்கேந்திய காரிகையாய்
கனவில் தேவதைதான்  வந்தாள்,
வண்ணச் சிறகுகள் மினுமினுக்க
வரம்தான்  என்ன வேண்டுமென்றாள்!
"நிஜத்தில் உன்னைப் பார்க்கவே
நீண்டநாளாய்ஆசைஎன்றேன்"
'கண்ணை விழித்துப்பார்!' என்றாள்,
கண்டேன் எந்தன் தாய் அங்கே!
ANIMATED GLITTER ANGEL ANGELS FANTASY MYSTICAL MYSTIC GRAPHICS IMAGES ANIMATED GLITTER ANGEL ANGELS BACKGROUNDS LAYOUTS FANTASY MYSTICAL MYSTIC Pictures, Images and Photos

பிரியம்


 பிரியும்போதுதான் புரியும்
"பிரியம் ".

அக்கரைப் பச்சை



குளத்துமீன் நினைத்ததாம்,
பிறந்தால் வாஸ்து மீனாய்ப் பிறக்கவேண்டும்
என்ன ஒரு ராஜவாழ்க்கை!

வாஸ்துமீன் நினைத்ததாம்,
பிறந்தால் குளத்துமீனாய்ப் பிறக்கவேண்டும்,
என்ன ஒரு கும்மாள வாழ்க்கை!

பெற்றவன் நீ குரு



 
மகவாய் உருவெடுத்தபோது
புவியைக்காட்டினாய்!
மழழையாய் தவழும்போது
தயக்கம் போக்கினாய்!
அதிர்வுகள் நோக்கும்போது
அரணாய் நின்றாய்!
மனம் வலித்தபோது
மனத்திட்பம் தந்தாய்!
தந்தை! எனைபெற்றவன் நீ குரு!


 
back to top